இலங்கை கிரிக்கெட் சபைக்குள்ளும் புகுந்தது கொரோனா.!! ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி..!

இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமையன்று பி.சி.ஆர் சோதனையைத் தொடர்ந்து, அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவருடன் தொடர்பிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துரித அன்ரிஜென் பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லையென்பது தெரிய வந்துள்ளது.இலங்கை கிரிக்கெட்டின் அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டும் ஊழியர்களுடன் நடப்பதாகவும், ஏனையவர்கள் வீட்டிலிருந்து பணி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!