இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக்குழு நியமனம்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால், முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தலைமையில்கிரிக்கெட் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலேசானைக்கமைய குறித்த நால்வர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகளை எடுப்பது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து இக்குழு செயற்படும் என, கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த டி சில்வா தலைமையிலான இந்த குழுவில், ரொஷான் மஹானாம, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

Sharing is caring!