இலங்கை தோல்வி: கடைசி லீக் போட்டியை வெற்றியுடன் முடித்த இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் மோதியுடன். ஹெட்டிங்கிலி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்து, இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 265 ரன்களை நிர்ணயித்தது.

இதையடுத்து, இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்தியா ரோகித், ராகுலின் சதத்தால்  44.3 ஓவரில் 265 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் 103, ராகுல் 111 ரன்கள் குவித்தனர். கோலி 34, ஹர்தி பாண்ட்யா 6 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இலங்கை அணி தரப்பில் மலிங்கா, ரஜிதா, உதனா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

Sharing is caring!