இலங்கை – நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை (14) ஆரம்பமாகவுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி நாளை காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணியும் நியூசிலாந்தும் இதுவரையில் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன.

அதில் 15 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளதுடன், இலங்கை அணி 08 போட்டிகளில் வென்றுள்ளது. எஞ்சிய 11 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற முடிவை எட்டியுள்ளன.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இலங்கையும் நியூசிலாந்தும் மோதவுள்ள முதல் போட்டியாக நாளைய போட்டி அமையவுள்ளது.

Sharing is caring!