இலங்கை – நியூஸிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் இன்று

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (22) ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியதுடன், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1 – 0 என முன்னிலை பெற்றுள்ளது.

கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், இலங்கை அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், 7 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்தநிலையில், உபாதைக்குள்ளான டில்ருவன் பெரேராவின் உடல் நிலை தேறியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதேவேளை, நியூஸிலாந்து அணியின் நீல் வேக்னருக்கு பதிலாக வில்லியம் சமர்வில் இன்று அணிக்கு அழைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!