இலங்கை – பங்களாதேஷ் இடையிலான இறுதிப் போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டி இன்று (31) நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை இன்றைய போட்டி எஞ்சிய நிலையில், இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியை இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரவுக்கான சமர்ப்பணப் போட்டியாக நடாத்துவதற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் வெற்றியீட்டும் பட்சத்தில் அது 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி அடைந்த வைட்வொஷ் வெற்றியாகப் பதிவாகும்.

இலங்கை அணி இறுதியாக 2016ஆம் ஆண்டு அயர்லாந்து அணியை வைட்வொஷ் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!