இலங்கை – பங்களாதேஷ் தொடருக்கான போட்டி அட்டவணை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் 2, நான்கு நாட்கள் கொண்ட தொடரொன்றில் விளையாடவுள்ளன.

தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கைக் குழாம் எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டிலிருந்து பங்களாதேஷுக்கு பயணமாகவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளும் எதிர்வரும் 18 , 21 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான 4 நாட்கள் கொண்ட உத்தியோகபற்றற்ற டெஸ்ட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது உத்தியோகபற்றற்ற டெஸ்ட் போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்க வழிநடத்தவுள்ளார்.

தென்னாபிரிக்க வளர்முக அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரகாசித்த மொஹமட் சிராஷுக்கும் இந்தத் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!