இலங்கை பொலிஸ் கழக அணி சாம்பியனானது

சர்வதேச பொலிஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை பொலிஸ் கழக அணி சாம்பியனானது.

ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டித் தொடர் இங்கிலாந்தின் வொஸ்டர்ஷயரில் 5 நாட்களாக நடைபெற்றது.

இருபதுக்கு 20 போட்டிகளாக நடத்தப்பட்டத் தொடரில் 16 நாடுகளின் பொலிஸ் அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இலங்கை அணி சாம்பியனானது.

இலங்கை அணிக்கு பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஷ்பகுமார தலைவராக செயற்பட்டார்.

பங்கேற்ற முதல் சந்தர்ப்பத்தி​லேயே இலங்கை பொலிஸ் அணி சாம்பியனாகியுள்ளமை சிறப்பம்சமாகும்.

Sharing is caring!