இலங்கை மகளிர் அணிக்கு எதிரான நான்காவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியொன்றில் இந்திய மகளிர் அணி வெற்றி

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான நான்காவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியொன்றில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு சி.சி சி.மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டி சீரற்ற வானிலை காரணமாக 17 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

போட்டியில்முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி சார்பாக ஷஷிகலா சிறிவர்தன 40 ஓட்டங்களை பெற்றார்.

அணித்தலைவி ச்சமரி அத்தபத்து 31 ஓட்டங்களை பெற்றார்.

ஏனைய வீராங்கனைகள் பிரகாசிக்காத நிலையில் இலங்கை மகளிர் அணி 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களை பெற்றது.

அனுஜா பட்டீல் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய மகளிர் அணி 15 தசம் நான்கு ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய மகளிர் அணி சார்பாக Jemimah Rodrigues 52 ஓட்டங்களையும் அனுஜா பட்டீல் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

Sharing is caring!