இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான பயிற்சிப் போட்டி ஆரம்பம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதி அங்கமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அமைந்துள்ளது.

இந்தத் தொடருக்கான முன்னோடியாக 2 நாட்கள் கொண்ட 2 பயிற்சிப்போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.

முதலாவது பயிற்சிப்போட்டி இன்று கொழும்பு என்.சி.சி. மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

இந்தப் போட்டியில் இலங்கை பதினொருவர் அணியை லஹிரு திரிமன்னே வழிநடத்துகிறார்.

முன்னாள் தலைவரான ஏஞ்சலோ மெத்தியூஸுக்கும் இந்தப் போட்டிக்கான இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்தத் தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி வன் தெலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!