இலங்கை வந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் கப்டனை நெகிழ வைத்த இலங்கை ரசிகர்கள்..!

அண்மையில் நடைபெற்று முடிந்த உலகக் கிரிக்கட் போட்டித் தொடரின் போது நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸ்சன் தொடர்பில் அதிகமாக பேசப்பட்டது.

இறுதிப் போட்டியில் மிகவும் கனவானாகவும், பொறுமையுடனும் வில்லியம்ஸ் நடந்து கொண்டார் என வில்லியம்ஸனை கிரிக்கட் உலகமே கொண்டாடி மகிழ்ந்தது. இந்த நிலையில், இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி பயிற்சிப் போட்டியொன்றில் பங்கேற்ற போது, இலங்கை ரசிகர்கள் வில்லியம்ஸனை நெகிழச் செய்துள்ளனர். கேன் வில்லியம்ஸன் இன்று தனது 29ம் பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

கட்டுநாயக்க மைதானத்தில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தை பார்வையிட வந்திருந்த ரசிகர்கள், பிறந்த நாள் கேக் ஒன்றை கேன் வில்லியம்ஸனுக்கு ஊட்டி விட்டு தங்களது அன்பை தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் அதிகாரபூர்வ டுவிட்டர், பக்கத்திலும் இந்தப் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிபப்பிடத்தக்கது.

Sharing is caring!