இலங்கை வீரர் மெத்யூஸ்…புதிய சாதனை

இலங்கை கிரிக்கெட் ஒருநாள் அணியின் தலைவர் எஞ்சலா மெத்யூஸ் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

3,000 ஓட்டங்களை தாண்டிய வீரர் என்ற சாதனையையே எஞ்சலா மெத்யூஸ் படைத்துள்ளார்.

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இலங்கை அணிக்கு இடையிலான ஒரு நாள் தொடர் இடம்பெற்று வருகின்றது.

இதன் போதே அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார். இதுவரையில் அவர் 3075 ஓட்டங்களை அணித்தலைவராக குவித்துள்ளார்.

அதற்கமைய 3000 ஓட்டங்களை அணித்தலைவராக இருந்து கடந்த நான்காவது இலங்கை வீரர் என்ற பெருமையை எஞ்சலா மெத்யூஸ் பெற்றுள்ளார்.

Sharing is caring!