இல்லை…சாய்னா நேவால் டாப் 10 ல் இல்லை

பேட்மின்டன் தரவரிசையில் டாப் 10ல் இருந்து வெளியேறினார் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால். அதே போல், கிடாம்பி ஸ்ரீகாந்தும் தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பிவி சிந்து, 3-வது இடத்தில் நீடிக்கிறார். அப்போட்டியில் சிறப்பாக செயல்படாத காரணத்தினால் சாய்னா நேவால், ஒரு இடம் இறங்கி 11-வது இடத்தை பிடித்தார்.

ஹெச்.எஸ். பிரணாய், 11-வது இடத்தில் நீடித்து வருகிறார். சாய் பிரனீத், 2 இடங்கள் ஏற்றம் கண்டு 24-வது இடத்தை பிடித்துள்ளார். சமீர் வர்மா, 2 இடங்கள் பின் தங்கி 21-வது இடத்தை பிடித்தார்.

கலப்பு பிரிவில், அஷ்வினி பொன்னப்பா – ராங்கி ரெட்டி, 12 இடங்கள் ஏற்றம் கண்டு 28-வது இடத்தை பிடித்துள்ளனர்.

ஆடவர் இரட்டையரில், சாத்விக் – சிராக், இரு இடங்கள் ஏறி 23-வது இடத்தில் உள்ளனர்.

Sharing is caring!