இளம் இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு முன் டோனியிடம் ஆசீர்வாதம்!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான இளம் இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு முன் டோனியிடம் ஆசீர்வாதம் வாங்கிய காட்சி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

19 வயதிற்குட்பட்ட உலகக் கோப்பையில் பட்டையை கிளப்பிய இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சார்ஜாவில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார்.

19 வயதிற்குட்பட்ட உலகக் கோப்பையின் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதம் அடித்தது உட்பட ஆறு இன்னிங்ஸ்களில் 400 ரன்கள் எடுத்து தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரரகாக திகழ்ந்தார் ஜெய்ஸ்வால்.

சார்ஜாவில் சிஎஸ்கே கேப்டன் ராஜஸ்தானுக்கு எதிரான டாஸ் போட சென்றபோது, ஜெய்ஸ்வால் அந்த தருணத்தை டோனியிடம் ஆசீர்வாதம் பெறுவதற்கான சரியான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

டோனிக்கு அருகே சென்ற ஜெய்வால், அவருக்கு முன்னால் இரு கைகளையும் கூப்பி தலை குனிந்தார், இந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சார்ஜாவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ராஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாத்தில் வெற்றிப்பெற்றது.

Sharing is caring!