இளம் இந்திய வீரர் குறித்து பிசிசிஐ வெளியிட்ட முக்கிய தகவல்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் 3வது நாள் பீல்டிங்கின் போது காயமடைந்த இந்திய இளம் வீரர் சுப்மன் கில்-ன் உடல்நலம் குறித்து பிசிசிஐ முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னையில் நடந்து வரும் இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

34 ஓவர் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 88 ஓட்டங்கள் எடுத்துள்ள இங்கிலாந்து அணி, 482 என்ற இமலாய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ள தகவலின் படி, இரண்டாவது டெஸ்டின் 3வது நாள் பீல்டிங் செய்யும் போது சுப்மன் கில்-க்கு இடது முன்கையில் காயம் ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கையாக அவருக்கு தற்போது ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ மருத்துவ குழு அவரை மதிப்பீடு செய்து வருகின்றனர். அவர் இன்று(4வது நாள்) பீல்டிங் செய்ய மாட்டார் என தெரிவித்துள்ளது.

Sharing is caring!