உண்மை அலசல்: மாரடோனாவின் இறுதிச்சடங்கில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் ஆயிரக்கணக்கில் கொரோனா மரணம் ஏற்படுமா?

மாரடோனாவின் இறுதிச்சடங்கில் எண்ணில் அடங்காத வகையில் பாரிய கூட்டம் கூடியதாக ஒரு வீடியோ வைரலான நிலையில் அதன் உண்மை தன்மை தெரியவந்துள்ளது.

அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனா கடந்த மாதம் 25ஆம் திகதி தூக்கத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்த நிலையில் மாரடோனாவின் இறுதிச்சடங்கில் எடுக்கப்பட்டதாக கூறி ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் உலா வந்தது.

அதில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அதை பார்த்த பலரும் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்தனர்.

மாரடோனா பிரதமரோ, ஜனாதிபதியோ இல்லை, ஆனால் அவர் மீது மக்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த மாபெரும் கூட்டமே சான்று என சிலர் கூறினர்.

மேலும் சிலர் கூறுகையில், இந்த கூட்டத்தை பாருங்கள், வெகுவிரைவில் கொரோனாவால் இந்த கூட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இறக்க போகிறார்கள் என சிலர் காட்டமாக கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மை தன்மை வெளியாகியுள்ளது.

அதன்படி, அது மாரடோனாவின் இறுதிச்சடங்கில் எடுக்கப்பட்ட வீடியோ கிடையாது.

வீடியோவானது அர்ஜெண்டினா முன்னாள் ஜனாதிபதி மவுரிகோ மேக்ரிக்கு ஆதரவாக திரண்ட மாபெரும் பிரம்மாண்ட கூட்டத்தின் வீடியோ ஆகும்.

அது கடந்தாண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.

Sharing is caring!