உலகக்கிண்ண ரக்பி: அரையிறுதிக்கான நடுவர் குழாம்

உலகக்கிண்ண ரக்பி தொடரில் அரையிறுதிப் போட்டிகளுக்கான நடுவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண ரக்பி தொடரில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான நியூஸிலாந்து முன்னாள் சம்பியனான இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது.

இந்தப் போட்டியில் வேல்ஸின் நய்ஜெல் ஓவன்ஸ் நடுவராகக் கடமையாற்றவுள்ளார்.

பிரான்ஸின் ரொமேன் ஜொய்ட் மற்றும் ஜொய்சல் கெசரோ ஆகியோர் இந்தப் போட்டியில் இணை நடுவர்களாக கடமையாற்றவுள்ளனர்.

இதனிடையே, வேல்ஸ் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸின் ஜெரோம் ஹார்கஸ் பிரதான நடுவராக கடமையாற்றவுள்ளார்.

உலகக்கிண்ண ரக்பி தொடர் ஜப்பானில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!