உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு பிரேசில் அணி முன்னேறியுள்ளது. இன்று நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் பிரேசில் மெக்சிகோவை வீழ்த்தியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன.

இரண்டாவது பாதி தொடங்கியது முதல் பிரேசில் அணி ஆதிக்கம் செலுத்தியது. இப்போட்டியின் 51 வது நிமிடத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்க 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் 88 வது நிமிடத்தில் பிரேசிலின் பிர்மினோ கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். மெக்சிகோ அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

ஆட்டத்தின் முழுநேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக ரஷ்யா, குரேஷியா, உருகுவே, பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

Sharing is caring!