உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இளவேனில் !

உலகக்கோப்பை  துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரேசிலில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 10 மீ ஏர்ரைப்பில் பிரிவில் 251.7 புள்ளிகளை பெற்று தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ளார். இவர் தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர்.

தங்கம் வென்ற தங்க மங்கைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

Sharing is caring!