உலகக்கோப்பை பைனல்: இங்கிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்கு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 242 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.

கப்தில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு, நிக்கோலஸ், வில்லியம்சன் ஜோடி மெதுவாக ரன்களை சேர்த்தது. இதனால் முதல் 10 ஓவர்களுக்கு 33 ரன்கள் எடுக்கப்பட்டது. வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்திருந்த போது பிளங்கெட் பந்துவீச்சில் ஆட்டமிழ்ந்தார். இந்த ஜோடி 74 ரன்கள் சேர்த்தது. சிறிது நேரத்தில் அரைசதம் அடித்த  நிக்கோலசும் (55 ரன்கள்) ஆட்டமிழந்தார் பிளங்கெட் பந்துவீச்சில்.

101/1 என இருந்த நியூசிலாந்து 141/4 என சறுக்கியது. டெய்லர் 15, நீஷம் 19, கிராண்ட்ஹோம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். லாதம் மட்டும் பொறுப்புடன் ஆடி வந்தார். அவரும் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 10 ஓவர்களில் நியூசிலாந்து 62 ரன்கள் அடித்தது.

அருமையாக பந்துவீசிய இங்கிலாந்து பவுலர்கள் 21 முதல் 34 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடவில்லை நியூசி., பேட்ஸ்மேன்களை.

பிளன்கெட் 3/42, வோக்ஸ் 3/37, ஆர்ச்சர் 1/42, வுட் 1/49

Sharing is caring!