உலகக் கிண்ணத் தொடருக்கு தம்மை உளரீதியாக வலுப்படுத்தும்

இங்கிலாந்திற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு தம்மை உளரீதியாக வலுப்படுத்தும் என இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் கூறியுள்ளார்.

கொழும்பில் ​நேற்று (03) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் தொடர் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வீரர்களுக்கு சவாலானது. எனினும், சகல வீரர்களும் உளரீதியாக உயர்மட்டத்தில் இருக்கிறார்கள். இந்தத் தொடரை நாம் வெற்றிகரமாக நிறைவுசெய்தால், அது உலகக் கிண்ணத்தொடருக்கு எம்மை உளரீதியாக வலுப்படுத்தும். அதற்காக, வீரர்கள் மிகுந்த சிரத்தையுடன் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். எமக்குத் தேவையான பெறுபேற்றை நாம் பெற்றால் இந்தத் தொடர் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாய் அமையும்

என தினேஷ் சந்திமால் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் எம்மால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியவில்லை. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோன்று, அந்தத் தொடரில் காணப்பட்ட சவால்களைவிட இந்தத் தொடரிலுள்ள சவால்கள் முற்றுமுழுதாக மாறுபட்டவை. ஆடுகளங்களும் காலநிலையும் அத்துடன் அணியும் மாறுபட்டது. இதற்கு சற்று வித்தியாசமாகத் திட்டமிட்டே நாம் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். சுமார் 4 வருடங்களுக்கு பின்னர் இவர்களுடன் நாம் விளையாடவுள்ளோம். அதுதவிர இந்த அணிக்கு வேறொரு சவாலும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். நாம் இந்தத் தொடரில் துடுப்பெடுத்தாடும் விதமும் பந்துவீசும் விதமும் களத்தடுப்பில் ஈடுபடும் விதமும் இங்கு முக்கியமானவை

என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் சந்திக ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் 10 ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது.

Sharing is caring!