உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறுவதே இலங்கை அணியின் ஒரே இலக்கு

ஆசிய வலைப்பந்தாட்டத்தில் சாம்பியனாகி, உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறுவதே இலங்கை அணியின் ஒரே இலக்கு என நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரிலிருந்து ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

லீக் சுற்றில் சைனிஸ் தாய்பே, இந்தியா ஆகிய அணிகளை வென்ற இலங்கை அணி இரண்டாம் சுற்றில் சிங்கப்பூர், மலேஷியா, ஹொங்கொங் ஆகிய அணிகளை வெற்றி கொண்டு கிண்ணத்திற்கான அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இலங்கை பங்குபற்றும் அரை இறுதிப் போட்டி ஹொங்கொங் அணிக்கு எதிராக இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் அதிக கோல்களைப் போட்ட வீராங்கனையாக தர்ஜினி சிவலிங்கம் திகழ்கிறார்.

Sharing is caring!