உலகக் கிண்ண றக்பி: உருகுவே அணி வெற்றி

2019 உலகக் கிண்ண றக்பி தொடரில் Fiji அணிக்கு எதிரான போட்டியில் 30 – 27 என்ற புள்ளிகள் கணக்கில் உருகுவே அணி வெற்றியீட்டியள்ளது.

உலகக் கிண்ண றக்பி தொடர் ஜப்பானில் நடைபெறுகின்றது.

இதில் D குழுவுக்கான இன்றைய போட்டியில் உருகுவே மற்றும் Fiji அணிகள் மோதின.

ஜப்பானின் கமாய்ஷி சிட்டி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றுள்ளது.

போட்டியை சவாலாக ஆரம்பித்த உருகுவே அணி வீரர்கள் முதல் பகுதியில் 24 – 12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றனர்.

உருகுவே அணி வீரர்கள் முதல் பகுதியில் 3 ட்ரைகள் 3 கோல்கள் மற்றும் 2 பெனால்டிகளை பூர்த்தி செய்தனர்.

இவ்வருட உலகக் கிண்ண றக்பி தொடரில் Fiji அணி அடையும் தொடர்ச்சியான இரண்டாவது தோல்வி இதுவாகப் பதிவாகியுள்ளது.

Sharing is caring!