உலகளாவிய ரீதியில் சர்ச்சைக்குரிய நபராக மாறிய இலங்கை பிரபலம்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியின் போது எடுத்த தீர்மானங்கள் பற்றி கவலையடையவில்லை என்று சர்வதேச கிரிக்கெட் நடுவர் குமார தர்மசேன தெரிவித்துள்ளார்.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 5 ஓட்டங்களை வழங்குவதற்குப் பதிலாக 6 ஓட்டங்களை வழங்க எடுத்த தீர்மானம் கூட்டாக எடுக்கப்பட்டதாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தீர்மானத்தில் தவறுகள் இருந்தாலும், அது பற்றி கவலையடையப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இன்று வெளியான தேசிய பத்திரிகையுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலில் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் குமார தர்மசேன எடுத்த தீர்மானங்கள் பற்றி சமூக வலைத்தளங்களின் ஊடாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

Sharing is caring!