உலகின் தலைசிறந்த துடுப்பாட்டகாரர் இவர் தான்..!

உலகின் தலைசிறந்த துடுப்பாட்டகாரர் யார் என்பது குறித்து மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டகாரர் சிவநாரயண் சந்தர்பால் தெரிவித்துள்ளார்.

2020 சாலை பாதுகாப்பு உலக தொடருக்காக சில தினங்களுக்கு முன் சந்தர்பால் இந்தியாவில் இருந்தார். ஆனால், கொரோனா காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் உலகின் சிறந்த துடுப்பாட்டகாரர் குறித்த கேள்விக்கு பதிலளித்த சந்தர்பால், உலகின் தலைசிறந்த துடுப்பாட்டகாரர் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தான்.

அவர் தனது விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் பணியாற்றி வருகிறார், மேலும் விளைவுகளை நாம் களத்தில் காண்கிறோம்.

அவர் தனது உடற்தகுதிக்கு கடுமையாக உழைத்து வருகிறார்; அவர் தனது திறமைகளை வளர்த்து வருகிறார்.

அவர் கடின உழைப்பில் ஈடுபடுவதை நீங்கள் காண்கிறீர்கள், மேலும் அவர் எப்போதும் சிறப்பாகச் விளையாட விரும்பும் வீரர்களில் ஒருவர். அவர் அதை நிரூபித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் உச்சியில் இவ்வளவு காலம் இருப்பது எளிதானது அல்ல என சந்தர்பால் கோஹ்லிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Sharing is caring!