உலகின் மிக வேக மனிதர் என பெயர்பெற்ற உசைன் போல்டை மிஞ்சிய நபர்!

உலகின் மிக வேக மனிதர் என பெயர்பெற்ற உசைன் போல்டைவிட வேகமாக ஓடி, கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டைப்போல் கர்நாடகாவில் கம்பளா எனும் எருது ஓட்டப்பந்தயம் மிகவும் பிரசித்திப் பெற்ற பாரம்பரிய விளையாட்டு.

இதில், சேற்றில் எருதுகளை ஓடவிட்டு, அதன் கயிறுகளை பிடித்தபடி அந்த விளையாட்டில் பங்குபெறும் வீரர்கள் ஓட வேண்டும்.

இந்நிலையில், கடந்த 1ஆம் திகதி நடந்த எருது ஓட்டப்பந்தயத்தில், கம்பளா எருது பயிற்சி வீரரான ஸ்ரீநிவாச கவுடா (28) என்பவர் தனது எருதுகளுடன் கலந்து கொண்டார்.

இவர், கிட்டத்தட்ட 143 மீட்டர் தூரத்தை, 13.62 நொடிகளில் ஓடிக்கடந்து வெற்றி பெற்றார். அதாவது, 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்துள்ளார்.

2017ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்டு அந்த இலக்கை 9.69 வினாடிகளில் கடந்தார்.

இதுவே இதுவரை உலக சாதனையாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதை மிஞ்சும் வகையில் 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்து ஸ்ரீநிவாச கவுடா சாதனை படைத்துள்ளார்.

Sharing is caring!