உலக கிண்ணத்திற்கான தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தில் மொஹமட் அமருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்க குழாம்களும் இன்று அறிவிக்கப்பட்டன.

பாகிஸ்தான் அணியின் தலைவர் பொறுப்பில் சப்ராஸ் அஹமட் நீடிக்கப்பட்டுள்ளதுடன், பாபர் அசாம், பகார் ஷமான், இமாம் உல் ஹக், மொஹமட் ஹாபிஸ், சொஹைப் மாலிக் ஆகியோர் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

என்றாலும், வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் அமருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

பஹீம் அஷ்ரஃப், அபிட் அலி, ஹாரிஸ் சொஹைல், ஹசன் அலி, இமாட் வசிம், ஜூனைட் கான், மொஹமட் ஹஸ்னைன், ஷடப் கான், சஹீன் ஷாஹ் அஃப்ரிடி ஆகியோரும் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான தென் ஆபிரிக்க குழாம் இன்று பிற்பகலில் அறிவிக்கப்பட்டது.

ஃபெப் டு பிலெசிஸ் தலைமையிலான குழாத்தில் ஹாசிம் அம்லா, குயின்டன் டி கொக், JP டுமினி, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, கெகிஷோ ரபாடா, டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாஹிர் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

Sharing is caring!