உலக கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் – மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் – மொராக்கோ அணிகள் இன்று மாலை 5. 30 மணிக்கு மோதுகின்றன.
ஸ்பெயினுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 33 என்ற கணக்கில் ‘டிரா’ செய்த போர்ச்சுகல் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது.

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆட்டம் 3-3 என டிராவானது. பி பிரிவின் புள்ளிப் பட்டியலில் ஈரான் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் தலா 1 புள்ளியைப் பெற்றுள்ளன. மொராக்கோ புள்ளி ஏதும் பெறவில்லை.

இந்த நிலையில் இந்த ஆட்டம் இன்று சூடு பிடிக்க உள்ளது.

ஏற்கனவே ஸ்பெயினுடன் போர்ச்சுகல் ஆடிய போது அந்த அணியின் சூப்பர் ஸ்டார் பிளேயர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனி ஆளாக போர்ச்சுகல் அணியை தூக்கிப் பிடித்தார்.

இந்த உலகக் கோப்பையின் மிகவும் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படும் அந்த ஆட்டத்தின் 4வது நிமிடம் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ கோலடித்தார். 24வது நிமிடத்தில் டியாஜோ கோஸ்டா கோலடித்து சமநிலையை உருவாக்கினார்.

பின்னர் 44வது நிமிடத்தில் ரொனால்டோ மற்றொரு கோலை அடித்தார். 55வது நிமிடத்தில் ஸ்பெயினின் கோஸ்டா மற்றொரு கோலடிக்க இரு அணிகளும் 2-2 என சம நிலையில் இருந்தன.

58வது நிமிடத்தில் நாசோ கோலடிக்க ஸ்பெயின் 3-2 என முன்னிலை பெற்றது.

ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருக்கையில், 88வது நிமிடத்தில் ஹாட்ரிக் கோலடித்து அணியை மீட்டார் ரொனால்டோ. இந்த நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ரொனால்டோ கோல் மழையை பொழிய வாய்ப்புண்டு.

இரு அணிகளையும் ஒப்பீடு செய்கையில் ஆப்பிரிக்க தேசமான மொராக்கோவை விட போர்ச்சுகல் அணி சக்தி வாய்ந்த அணி என்பதால் போர்ச்சுகல் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

Sharing is caring!