உலக சாதனை… 200வது ஒருநாள் போட்டியில் விளையாடி வீராங்கனையானார் மிதாலி ராஜ்

நியூசிலாந்து:
உலக சாதனை… உலகளவில் 200வது ஒருநாள் போட்டியை விளையாடிய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் மிதாலி ராஜ்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிா் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடாில் விளையாடி வருகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் 3வது போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது.

உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ்க்கு இது 200வது ஒருநாள் போட்டியாகும். உலகளவில் 200வது ஒருநாள் போட்டியை விளையாடிய முதல் வீராங்கனை என்ற பெருமை இதன் மூலம் மிதாலிராஜ்க்கு கிடைத்துள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி

Sharing is caring!