உலக துப்பாக்கிச்சுடும் போட்டி… இந்தியாவிற்கு தங்கம்

சங்வான்:
உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

தென் கொரியாவின் சங்வான் நகரில் நடந்து வரும் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் பதக்கம் வென்றனர்.

இந்நிலையில் ஆண்கள் ஜூனியர் பிரிவு போட்டியில் 16 வயது ஹிர்டே ஹஜாரிகா தங்க பதக்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இவர் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 2 தங்கம் உட்பட 3 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!