உலக பேட்மிண்டன்: சிந்து, சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

உலக பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, சாய் பிரனீத் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில், உலக பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி சுற்றில் இந்தியாவின் சிந்து, தைவானின் டைட்சூ இங்-யுடன் மோதினார். முதல் செட்டை இழந்த சிந்து இரண்டு மற்றும் மூன்றாவது செட்டுகளை போராடி கைப்பற்றினார். இறுதியில் 12-21, 23-21,21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாய் பிரனீத், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதினார். இறுதியில் 24-22, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்க முன்னேறினார்.

Sharing is caring!