உலக பேட்மிண்டன்: வரலாறு படைத்தார் பி.வி.சிந்து

உலக  பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இன்று நடைபெற்ற உலக  பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இதில், சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட்களில் ஒகுஹாராவை தோற்கடித்து, தங்கம் வென்று அசத்தியுள்ளார். கடந்த இரண்டு முறை வெள்ளி வென்ற சிந்து இந்த முறை தங்கம் வென்றுள்ளார்.

இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.

Sharing is caring!