ஊக்க மருந்து பயன்பாடு… இந்திய கிரிக்கெட் வீரருக்கு வந்தது வினை!

ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மருந்தை  கவனக்குறைவாக உட்கொண்டதால்,  அவருக்கு 8 மாதங்கள் விளையாட தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா தொடரில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியபோது பிரித்வி ஷாவுக்கு காயம் ஏற்பட்டு, அந்த தொடரில் அவரால் விளையாடாமல் போனது. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் காயம் காரணமாக பிரித்வி ஷா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயம் குணமடைந்தும், நூறு சதவீதம் உடல்தகுதியை அவர் எட்டவில்லை. இதனால் அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய பிரித்வி ஷா, இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று, தொடக்க ஆட்டக்காரராக நன்கு வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுபவர்.

Sharing is caring!