ஊனம் தடையே இல்லை… கோல்ப் விளையாட்டில் அசத்தும் கனடாவின் மாற்றுதிறனாளி வீரர்

ஊனம் தடையே இல்லை… சாதனைக்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், கனடாவை சேர்ந்த ஒரு கையை மட்டுமே கொண்ட மாற்றுதிறனாளி வீரர் ஒருவர் கோல்ப் விளையாட்டில் அசத்தி வருகிறார்.

61 வயதாகும் அவரின் பெயர் லாரன்ட் ஹர்டுபைஸ் (Laurent Hurtubise). பிறந்தபோதே அவருக்கு இடது கை மட்டுமே இருந்தது. ஊனத்தை கண்டு முடங்கி விடாமல் 11 வயது முதல் கோல்ப் விளையாடி வருகிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற முதல்தர போட்டியில், நீண்ட தொலைவிலிருந்த குழியில் பந்தை ஒரே அடியில் தள்ளி அனைவரையும் அசத்தினார். இவரது தன்னம்பிக்கையை கண்டு அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Sharing is caring!