எதிர்பார்ப்பு?…மெக்ராத் சாதனையை முறியடிப்பாரா எண்டர்சன்?

மெக்ராத் சாதனையை முறியடிப்பாரா எண்டர்சன்? என்ற கேள்வி தற்போது பலரால் கேட்க்கப்படுகின்றது.

இங்கிலாந்து வீரர் எண்டர்சன் மெக்ராத் சாதனையை முறியடித்து விட்டால் எண்டர்சனின் சாதனையை எவராலும் தொட முடியாது என மெக்ராத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெகராத் இந்த விடயத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

மெகராத் 124 டெஸ்ட் போட்டிகளில் 29 முறை ஐந்து விக்கெட் மற்றும் 3 முறை 10 விக்கெட்டுக்களுடன் 563 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் பட்டியிலில் மெக்ராத் முதல் இடத்தில் உள்ளார். 2007ஆம் ஆண்டுடன் அவர் ஓய்வு பெற்றார்.

தனது சாதனையை யாராலும் முறியடிக்க முடியாதென மெகராத் கூறிய நிலையில், எண்டர்சன் அதனை முறியடிக்கும் நிலையில் உள்ளார்.

எண்டர்சன் 141 போட்டிகளில் 26 ஐந்து விக்கெட், 3 பத்து விக்கெட்டுக்களுடன் 557 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

7 விக்கெட்டுக்கள் மாத்திரம் வீழ்த்தினால் மெக்ராத் சாதனையை எண்டர்சன் முறியடிப்பார்.

Sharing is caring!