எனக்கு பைத்தியமா? ..கோபப்பட்ட தோனி

தோனி தன்னிடம் கோபப்பட்ட சம்பவம் குறித்து இளம் வீரர் குல்தீப் யாதவ் சமீபத்தில் பேசியுள்ளார்.

மைதானத்தில் தோனியின் அமைதியான சுபாவமே பலருக்கு பிடிக்கும். தோனி பதட்டம் அடையாமல் எதிரணியை துவம்சம் செய்வதற்கே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக அணியின் இக்கட்டான சூழலில் கூட அவர் அணி வீரர்களிடம் கடுமையாக பேசாதவர் என்று பலரும் புகழ்கின்றனர்.

இந்நிலையில் இளம் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், தோனி தன்னிடம் ஒரு முறை கோபப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள குல்தீப் யாதவ், “இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது தோனி என்னிடம் ஃபீல்டிங்கை மாற்று என்றார். ஆனால் நான் இப்போது இருக்கும் ஃபீல்டிங் செட்அப்பே சரியானதாக இருக்கிறது என்றேன். உடனே தோனி கோபமடைந்தார். என்னை பைத்தியம் என்று நினைத்தாயா, நான் 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்’ என்றார். பின் நான் ஃபீல்டிங்கை மாற்றினேன். சிறிது நேரத்தில் விக்கெட்” என கூறியிருக்கிறார்.

அந்த போட்டியில் அதற்கு முன்பு வரை குல்தீப் வீசிய 3 ஓவர்களில் எதிரணி 45 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!