என் வாழ்க்கையே மாற்றியவர் அனுஷ்கா..!!விராட்கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அனுஷ்கா சர்மாவும் 2013 முதல் காதலித்து வந்தாலும் 2017ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். அனுஷ்கா சர்மாவை பல தருணங்களில் பாராட்டி புகழந்துள்ளார் விராட் கோலி.

கொரோனா வைரஸ் காரணமாக பலரும் பல உதவிகளை செய்து வந்த நிலையில், விராட் கோலியும், தொகையை குறிப்பிடாமல் நிதியுதவியை பிரதமர் மோடியின் கேர்ஸுக்கு வழங்கினார்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஆன்லைனம் மூலமாக விராட் கோலி மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசினார்.

அப்போது அவரது மனைவி அனுஷ்கா சர்மா குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசினார். அதில்,

அனுஷ்காவை சந்திப்பதற்கு முன் நான் மிகவும் பொறுமை இழந்தவனாக இருந்தேன். அவரிடமிருந்து பல வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொண்டேன். என் வாழ்க்கையை மாற்றியவர் என்றே அவர் சொல்லலாம்.

இக்கட்டான சூழ்நிலைகளில் அவரது அமைதியை பார்க்கும் போது அந்த சூழலை எப்படி எதிர்த்து போராட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். கடினமான நேரங்களில் உங்கள் ஈகோவை தவிர்த்து எதிர்த்து போராட வேண்டும். இறுதியில் நீங்கள் கட்டாயம் ஒரு வழியை காண்பீர்கள்“ என தெரிவித்துள்ளார்.

Sharing is caring!