எல்.பி.எல் வீரர்கள் ஏலம் ஒக்ரோபர் 1ஆம் திகதி!

2020 லங்கா பிரீமியர் லீக்கின் (எல்பிஎல்) வீரர் ஏலம் ஒக்டோபர் 1 ஆம் திகதி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிறிஸ் கெய்ல், டேரன் சமி, டேரன் பிராவோ, ஷஹித் அப்ரிடி, ஷகிப்-அல்-ஹசன், ரவி போபரா, கொலின் மன்ரோ, முனாஃப் படேல், வெர்னான் பிலாண்டர் உள்ளிட்ட உட்பட சுமார் 150 பிரபல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் உள்ளனர்.

ஒவ்வொரு உரிமையாளரும் ஆறு சர்வதேச வீரர்களை வாங்க முடியும். மொத்தம் 30 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 65 உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை கொண்ட ஐந்து அணிகள் உருவாகும்.

இந்த போட்டிகள் வரும் நவம்பர் 14 முதல் டிசம்பர் 6 வரை நடைபெறும்.

ஓகஸ்ட் மாதத்தில் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தபோதும், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

போட்டிகள் தம்புள்ள, பல்லேகல மற்றும் ஹம்பாந்தோட்ட மைதானங்களில் நடைபெறும்.

லங்கா பிரீமியலர் லீக்கின் தொடக்க நிகழ்வுகள் ஹம்பாந்தோட்ட மைதானத்தில் நடைபெறும்.

Sharing is caring!