ஏசியன் பேட்மின்டன்: பிவி சிந்து முன்னேற்றம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

கடந்த 18ம் தேதி முதல் இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதில் இன்று பேட்மின்டன் நடைபெற்ற பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு துவக்க போட்டியில், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற பிவி சிந்து, உலகின் 52ம் இடம் வகிக்கும் வியட்நாமின் வு தி ட்ராங்கை எதிர்கொண்டார்.

58 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், சிந்து 21-10, 12-21, 23-21 என்ற கணக்கில் போராடி ட்ராங்கை வென்றார்.

அடுத்த சுற்றில் சிந்து, இந்தோனேசியாவின் க்ரெகொரியா மரிஸ்கா தன்ஜங்குடன் மோதுகிறார்.

Sharing is caring!