ஐபிஎல் கிரிக்கெட்டில் கிடைத்த முக்கிய பொறுப்பையடுத்து ஜாம்பவான் சங்ககாராவின் பதிவு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்தாண்டு ராஜஸ்தான் அணியின் இயக்குனராக குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ள் நிலையில் அது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய இயக்குனராக இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜாம்பவான் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதையடுத்து சங்ககாராவை வரவேற்கும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் டுவிட்டரில் பதிவிட்டது.

இது குறித்து சங்ககாரா டுவிட்டரில், அணியில் இணைவது உற்சாகத்தை கொடுக்கிறது.

அனைவருடனும் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!