ஐபிஎல் 2021…ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் இருந்து ஸ்மித் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்கள், தக்க வைத்து கொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு ஜனவரி 20-ஆம் திகதி கடைசி நாளாக இருந்தது.

அதன் படி ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில், அவுஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக அணியின் கேப்டன் பொறுப்பு, இளம் வீரரான சஞ்சு சாம்சனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Sharing is caring!