ஐஸ்லாந்து அணியை வீழ்த்திய குரோசியா!

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் குரோசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தியது

குரோசியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஐஸ்லாந்து அணி இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது.

இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்கள் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோசியா வீரர் மிலான் படேல்ஜ் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் 76-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கைல்பி சிகுர்ட்சன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.

அதைத்தொடர்ந்து 90-வது நிமிடத்தில் குரோசியா அணியின் இவான் பெரிசிக் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி மீண்டும் முன்னிலை பெற்றது.

அதன்பின் எந்த அணியிம் கோலும் அடிக்காததால் குரோசியா அணி 2-1 என வெற்றி பெற்றது. இதனால் ஐஸ்லாந்து அணி தொடரைவிட்டு வெளியேறியது.

Sharing is caring!