ஐ.பி.எல். தொடரில் உள்வாங்கப்படும் புதிய அணி..!! பழைய அணிகளும் கலைக்கப்படும்..?

எதிர்வரும் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 தொடரில், புதிதாக ஒரு அணி உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் (சர்தார் படேல் மைதானம்) கட்டப்பட்டுள்ளதால் அதற்கேற்ப ஒரு ஐ.பி.எல். அணியை உருவாக்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.
இதன்படி 2021ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் குஜராத் சார்பாக ஓர் அணி புதிதாக உருவாக்கப்படவுள்ளது.

இதனால், ஜனவரி அல்லது பெப்ரவரியில் ஐ.பி.எல் ஏலத்தை நடத்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.இதனால் தற்போதுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும் அறியப்படுகிறது.

Sharing is caring!