ஐ.பி.எல்., போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு புறப்பட்டார் தோனி

ஐ.பி.எல். போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டதால் தோனி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னையில் இருந்து புறப்பட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக பயிற்சி மேற்கொண்ட சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். தோனியிடம் கலந்துரையாடிய ஏராளமான ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினர்.

Sharing is caring!