ஐ.பி.எல் 2020: டெல்லியை வீழ்த்தி 5ஆவது முறையாக சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிடுமா மும்பை? மாபெரும் இறுதிப் போட்டி இன்று.!!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் மகுடத்திற்கான இறுதிப் போட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) டுபாயில் நடைபெறவுள்ள இப்போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கெபிடல்ஸ் அணியும் மோதவுள்ளன.இப்போட்டியில் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், டெல்லி அணிக்கு ஸ்ரேயஸ் ஐயரும் தலைமை தாங்குகின்றனர்.முன்னதாக நடப்பு தொடரில் இரு அணிகளும் மோதிய லீக் போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றிபெற்றது.

அத்துடன் முன்னதாக நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது நேரடி தகுதி போட்டியிலும் மும்பை அணியே வெற்றிபெற்றது.ஆகவே, மிகப்பெரிய நம்பிக்கை மற்றும் அனுபவத்துடன் இன்று டெல்லி அணியை மும்பை அணி எதிர்கொள்ளவுள்ளது.

நான்கு முறை சம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி இம்முறை ஐந்தாவது முறையாக சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிடுமா அல்லது முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள டெல்லி அணி சம்பியன் பட்டம் வெல்லுமா என பொறுத்திருந்து பார்ப்போம்..

Sharing is caring!