ஒருநாள் கிரிக்கெட்டுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு! இலங்கை வீரர்கள் எந்த இடத்தில்?

ஒருநாள் கிரிக்கெட்டுக்கான புதிய துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நேற்று இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி (871 புள்ளி), துணை கேப்டன் ரோகித் சர்மா (855 புள்ளி), பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (829 புள்ளி) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

நான்காம் இடத்தில் ராஸ் டெய்லர் 818 புள்ளிகளுடனும், பிரான்ஸாஸ் டு பிளிஸ் 790 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஒரு இடம் முன்னேறி 22-வது இடத்தையும், பேர்ஸ்டோ ஒரு இடம் ஏற்றம் கண்டு 13-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் 588 புள்ளிகளுடன் 35வது இடத்திலும், குசல் மெண்டீஸ் 557 புள்ளிகளுடன் 46வது இடத்திலும் உள்ளனர்.

Sharing is caring!