ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட்கோலி நான்காவது களமிறங்க வேண்டும்: சவுரவ் கங்குலி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட்கோலி நான்காவது பேட்ஸ்மேனாகக் களமிறங்க வேண்டும் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

2017ஜூலை மாதத்தில் இலங்கையுடனான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து இதுவரை பேட்டிங்கில் நான்காவது இடத்தில் லோகேஷ் ராகுல், கேதார் ஜாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஜிங்கியா ரகானே என ஆறுபேரை இந்திய அணி களமிறக்கிப் பார்த்துவிட்டது.இருந்தாலும் இன்னும் பேட்டிங் வரிசை ஒரு ஒழுங்குக்கு வரவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, மூன்றாமிடத்தில் லோகேஷ் ராகுலையும் நான்காமிடத்தில் விராட் கோலியையும் களமிறக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார்.

Sharing is caring!