ஒருநாள் தொடர் எதிர்வரும் 03 ஆம் திகதி ஆரம்பம்

Sri lanka flag combined with new zealand flag

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தொடருக்கான முதல் போட்டி மவுன் மவுங்கனி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இந்தப்போட்டிக்கான இலங்கை குழாத்தில் சதீர சமரவிக்கிரம பெயரிடப்பட்டுள்ளார்.

சகலதுறை வீரரும் முன்னாள் தலைவருமான ஏஞ்சலோ மெத்தியூஸின் வெற்றிடத்துக்கு பதிலாகவே அவர் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சதீர சமரவிக்கிரம இறுதியாக விளையாடியிருந்தார்

இதேவேளை டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மெத்தியூஸ் 13 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் 16 ஆம் இடத்தில் நீடித்த ஏஞ்சலோ மெத்தியூஸ் முன்று இடங்கள் முன்னேறியுள்ளார்.

இந்திய அணித்தவைரான விராட் கோஹ்லி முதலிடத்தில் நியூசிலாந்து அணித்தலைவரான கேன் வில்லியம்சன் இரண்டாமிடத்திலும் நீடிக்கின்றனர்.

Sharing is caring!