ஒரு நாள் தர வரிசை…பின் தள்ளப்பட்ட தென்ஆபிரிக்கா

இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா, தரவரிசையில் ஓரிடம் கீழிறங்கி உள்ளது.

இலங்கை – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 3-2 என முடிவுக்கு வந்தது. தொடரை வென்றாலும், கடைசி இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றதால், தரவரிசையில் தன்னுடைய 3-வது இடத்தை தென் ஆப்பிரிக்கா இழந்தது.

113 புள்ளிகளுடன் தொடரை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா, தற்போது 3 புள்ளிகள் இழந்து 110 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. 4-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியது.

மறுபுறம், இலங்கை 3 புள்ளிகள் அதிகம் பெற்றிருந்தாலும், (80 புள்ளிகள்) 8-வது இடத்திலேயே நீடித்து வருகிறது.

127 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், 121 புள்ளியுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றன.

Sharing is caring!