ஒரே ஒரு சிறுநீரகத்துடன் உலகத் தர வரிசையில் உச்சியை எட்டிய தடகள வீராங்கனை..!! குவியும் பாராட்டுக்கள்..!

ஒரே ஒரு சிறுநீரகம்… உலகத் தர வரிசையில் உச்சியை எட்டிய தடகள வீராங்கனை..

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி ஒரே ஒரு சிறுநீரகத்துடன் என்னால் உலக தர வரிசையில் உச்சியை எட்ட முடிந்தது என தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் பெருமையுடன் கூறியுள்ளார்.

பிரபல தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ். 2003-ல் பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக, தங்கப் பதக்கம் வென்றவர்.
இந்த நிலையில், பாபி ஜார்ஜ், தான் பதிவிட்ட ஒரு டுவிட் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தன்னுடைய வெற்றியின் போதும், விளையாட்டில் பல உச்சங்களை அடைந்தபோதும், தனக்கு ஒரு சிறுநீரகம் தான் இருந்தது என்று அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் டுவிட்டர் பதிவில், பலரால் இதை நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால், நான் மிக அதிர்ஷ்டசாலி.

ஒரே ஒரு சிறுநீரகம், வலி நிவாரணிக்கு கூட ஒவ்வாமை, மந்தமான கால்கள்… இப்படி பல தடைகள் என் முன் இருந்தன. ஆனாலும், என்னால் உலக தர வரிசையில் உச்சியை எட்ட முடிந்தது. இதை என் பயிற்சியாளரின் மாயமென்று சொல்வதா அல்லது திறமை என்று சொல்வதா என்று அஞ்சு குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!